முதல்முறை ட்ரெக்கிங் போறீங்களா? அப்போ இங்கு செல்லலாமே...

கர்நாடகா குடகு மண்டலத்தில் டடியன்மோல் மலை அமைந்துள்ளது. இந்தியாவின் சிறந்த காபி இங்கு விளைகிறது. 12 கி.மீ., மலையேற்றம் செய்யலாம். வழிநெடுகிலும் காபி மனம், புல்வெளிகள், அடர்ந்த காடுகள் இருக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் பகுதியில் அமைந்திருக்கிறது சதாக்பூர் டைகர் மலை. சுமார் 7 கி.மீ., தொலைவுக்கு மலையேற்றம் செய்தாலே அங்குள்ள சென்சால் வனவிலங்கு சரணாலயத்தை சென்றடைந்துவிட முடியும்.

இந்த மலையின் உச்சியிலிருந்து, உயரமான மலை சிகரங்களான மவுண்ட் எவரெஸ்ட் மற்றும் கன்ஜன்சுங்கா ஆகிய சிகரங்களைப் பார்க்க முடியும். சுமார் 5 மணி நேரத்தில் இந்த மலையில் ஏறி விடலாம்.

7 கி.மீ., தொலைவு கொண்ட செம்ப்ரா உச்சிமுனை மலையை நீங்கள் ஒரே நாளில் ஏறி, இறங்கிவிட முடியும். வழியெங்கிலும் தேயிலை, காபி தோட்டங்கள் என அழகிய காட்சிகளை ரசித்தபடி நீங்கள் மலையேற்றம் செய்யலாம்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், தர்மசாலா அருகே டிரையண்ட் மலை அமைந்துள்ளது. சுமார் 11 கி.மீ., தொலைவு கொண்ட இந்த மலையில் 4 முதல் 5 மணி நேரத்திற்குள்ளாக ஏறி விடலாம்.

நோங்கிரியாட் மலை 7 கி.மீ. தொலைவு கொண்ட மலைப் பயணம் தான். இங்கு அழகிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இங்கு எப்போதுமே மழை பெய்யும் என்பதால், தகுந்த வழிகாட்டியுடன் செல்வது நல்லது.