ஏலக்காயின் ஆரோக்கிய நன்மைகள் !
நல்ல மணமும், சுவையும் கொண்ட ஏலக்காய், உலகின் மூன்றாவது விலையுயர்ந்த மசாலாப் பொருள். மசாலாப் பொருட்களின் ராணி என பெருமையாக இதைக் குறிப்பிடுகின்றனர்.
ஏலக்காயில் இரும்பு, மக்னீசியம், செலினியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.
இது பசியை தூண்டும். பொதுவான செரிமான பிரச்னைகளுக்கு பயன்படுகிறது. குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண்களுக்குக் கூட இதைப் பயன்படுத்தலாம்.
ஏலக்காய் பழங்காலத்திலிருந்தே மவுத் ப்ரெஷ்னராக பயன்படுத்தப்படுகிறது. பற்சொத்தை, துர்நாற்றம், ஈறு பிரச்னை போன்றவற்றை ஏற்படுத்தும் 5 வகையான பாக்டீரியாக்களை ஏலக்காய் எதிர்க்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உடல் உள்ளுறுப்பு வீக்கத்தை எதிர்த்து போராடும். உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மதுவால் அல்லாத, உடல் பருமனால் கொழுப்பு மிகுந்த கல்லீரல் உள்ளவர்களுக்கு, ஏலக்காய் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஏலக்காயில் மெலடோனின் அதிகமாக இருப்பதால், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்கவும், எடையை குறைக்கவும் உதவுகிறது.
ஆயுர்வேத மருத்துவ நூல்கள், ஏலக்காயை பாலுணர்வூட்டும் பொருளாக பட்டியலிட்டுள்ளன. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, விறைப்புத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு பிரச்னையை தணிக்கும்.