இயற்கையாக பழுத்த மாம்பழங்களை கண்டுபிடிப்பது ஈஸிதான்... !
பொதுவாக இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் வாசனை தூக்கலாகவே இருக்கும். ஆனால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டிருந்தால் மனம் குறைவாகவே இருக்கும் அல்லது வேறு ஏதாவது வாசனை இருக்கக்கூடும்.
ஒரே பழத்திலேயே ஆங்காங்கே மஞ்சள், பச்சை, சிவப்பு, கோல்டன் போன்ற பல நிறங்களின் ஷேடுகள் கலந்திருக்கும். பழம் முழுக்க ஒரே மாதிரி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.
இயற்கையாகப் பழுக்கும் மாம்பழங்கள் பெரியதாக வளர வளர, பழுக்கும்போதும் அதன் பளபளப்புத் தன்மை குறைந்துவிடும்; வெளிப்புறத்தில் அடிப்பட்ட, அழுகியது போன்ற தோற்றம் காணப்படும்.
ஆனால் பழத்தின் சதைப்பகுதி நன்கு கெட்டியாக, சுவை நிறைந்ததாக இருக்கும். மாம்பழத்தை நறுக்கும்போது அதிலிருந்து சாறு வழியும்.
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிக பளபளப்புடன் இருக்கும்; கெட்டியாக இல்லாமல் மிருதுவாக இருக்கும்; சுவையும் குறைவாகவே இருக்கக்கூடும்.
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் குறைந்தளவிலேயே சாறு வரும்; சிலநேரங்களில் சாறு வரவே வராது.
குறிப்பிட்ட சீசனைத் தாண்டி மற்ற சீசன்களிலும் மாம்பழங்கள் பளபளப்புடன் கிடைத்தால் அது நிச்சயம் செயற்கையாக கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம்.