மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து நேற்று(மே 2) மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.
இன்று (மே 3)காலை 6:30 மணிக்கு தேரோட்டம் துவங்கி கோலாகலமாக நடந்தது.
கோவிலில் உள்ள முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர்.
அம்மன், சுவாமி தேர்கள் மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தன. லட்சக்கணக்கான பக்தர்கள், மாசி வீதிகளில் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, தேர்களில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். தேரடி கருப்பணசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.