கிச்சன் சிங்க்கை தேய்த்து கை வலிக்கிறதா?- இனி கவலை வேண்டாம்...!

பெரும்பாலான நாட்களில் சமையலறையில் உள்ள சிங்க்கில் படிந்துள்ள கறைகளை அகற்றுவது என்பது பெரும் போராட்டமாக இருக்கும்.

அழுக்கு மற்றும் கழுவப்படாத பாத்திரங்களை சிங்க்கில் அதிக நேரம் வைத்துக் கொள்வதனால், பாத்திரம் மற்றும் சிங்க்கில் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்.

பேக்கிங் சோடா, போராக்ஸ், உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து இரும்பு ஸ்க்ரப்பைப் பயன்படுத்தி தேய்த்து சுடுத்தண்ணீர் கொண்டு கழுவினால் புதிது போல் மாறும்.

ஒவ்வொரு முறையும் சிங்க்கை பயன்படுத்தும் போது சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மாதந்தோறும் சுத்தம் செய்யும் நேரம் மிச்சமாகும். இதற்குச் சோப்பு மற்றும் ஸ்கர்ப் கொண்டு தேய்த்தால் போதும்.

உப்பு சிறிதளவு எடுத்து சிங்க் முழுவதும் தூவி விட்டு, அதில் எலும்பிச்சை பழச்சாற்றைத் தெளித்து ஸ்கர்ப் கொண்டு தேய்த்தால் தினமும் படியும் எண்ணெய் மற்றும் மசாலா கறை நீங்குவதோடு, சிங்க் வாசனையாக இருக்கும்.

வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்துக் கலந்து அதை சிங்க் முழுவதும் ஸ்ப்ரே செய்து துணிக் கொண்டு துடைத்தால் பளிச் என்று மாறும்.