யுவதிகள் மத்தியில் வைரலாகும் சோனம் அணிந்த ஃப்ளோரல் கவுன்..!

இந்தியாவின் பேஷன் ஐகான்களில் ஒருவர் சோனம் கே அஹூஜா.

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம், டெல்லி சிக்ஸ் படம் மூலம் இந்தியாவின் பல இடங்களில் பிரபலமான நடிகையாக அறிமுகமானார்.

அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பலவித பேஷன் உடைகள் அணிந்து பேஷன் போஸ் கொடுக்கும் சோனம், சமீபத்தில் வெண்ணிற பேக்ரவுண்டில் பூக்கள்போல பேட்டர்ன் கொண்ட கவுன் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த கவுன் உடன் சிறிதளவு மேக்கப் மற்றும் தோடுகளுடன் சோனம் காட்சியளிக்கிறார்.

அனாமிகா கன்னா, எமிலியா விக்ஸ்டர்டு உள்ளிட்ட பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த இந்த ஆடையில் தற்போது சோனம் கொடுத்த போஸ் டிரெண்டாகி வருகிறது.

ஃப்ளோரல் டிசைனை விரும்பும் யுவதிகள் பலர் இந்த மாடலில் கவுன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.