கேன்ஸ் திரைப்பட விழா..வெள்ளை நிற ஆடையில் ரசிகர்களை கவரும் பிரபலங்கள்!

76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது பிரான்ஸில் மே 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த பிரமாண்டமான திரைப்பட விழாவில் உலகெங்கிலும் உள்ள பல மொழி திரைப்படங்கள் திரையிடப்படும்.

இந்த திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளில் கல்ந்துக்கொண்ட இஷா குப்தா, மனுஷி சில்லர் ஆகியோர் வெள்ளை நிற ஆடையில், சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்துள்ளனர்.

முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் வெள்ளை நிற கவுனில் சிண்ட்ரெல்லா போல் சிவப்பு கம்பளத்தில் காட்சியளித்தார்.

மனுஷி சில்லர் ஃபொவரி என்ற பேஷன் பிராண்ட்டைச் சேர்ந்த ஸ்ட்ராப்லெஸ் மற்றும் தரை நீள வெள்ளை நிற கவுனை அணிந்திருந்தார்.

இந்த கவுனிற்கு மேட்சிங் ஆக கழுத்தில் பச்சை நிற சோக்கர் நெக்லஸ் மற்றும் மோதிரத்தை அணிந்து மின்னுகிறார் மனுஷி சில்லர்.

நடிகை இஷா குப்தாவும் கேன்ஸ் விழாவின் முதல் நாளில் கலந்து கொண்டார். இவர் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைத் தரக்கூடிய அழகான வெள்ளை நிற நிக்கோலஸ் ஜெப்ரான் கவுனில் வந்திருந்தார்.

இந்த உடைக்கு இவர் ஃபிரெட் பாரிஷ் ஜூவல்லரியில் வைர மோதிரம் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார்.

இந்த உடைக்கு அளவான மேக்கப் போட்டு, கூந்தலை கொண்டை போட்டிருந்தது, இவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.