அழகிய கின்னாரில் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்
சிம்லா - காசா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம் கல்பா. பார்க்கும் இடங்களில் எல்லாம் ஆப்பிள் பழத்தோட்டங்கள், உயரமான பைன் மரங்கள் என அசர வைக்கின்றன.
பசுமையான காடுகள், அழகிய மலைக்காட்சிகள், சுற்றிலும் செர்ரி மற்றும் ஆப்பிள் பழத்தோட்டங்கள், பிரமிப்பூட்டும் பாஸ்பா நதி என இயற்கைப்பிரியர்களை மெய்மறக்கச் செய்கிறது சாங்க்லா பள்ளத்தாக்கு.
இயற்கை மற்றும் வனவிலங்குகளின் மீது மிகுந்த ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சார் பெஸ்ட் சாய்ஸ். இயற்கையுடன் அமைதியாக நேரத்தை செலவிடலாம்.
கடல் மட்டத்திலிருந்து 2290 மீ., உயரத்தில் ரெக்காங் பியோ அமைந்துள்ளது. இங்கிருந்து பனி படர்ந்த மலைகளை பார்க்கும் போது, அதற்கு மிக நெருக்கமாகவும் தனிப்பட்டதாகவும் இருப்பதைப் போன்று உணரலாம்.
ஆல்பைன் வகை தாவரங்கள், விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது லிபா அஸ்ரங் சரணாலயம். யாக், கரடி, பழுப்பு கஸ்தூரி மான், நீல செம்மறி ஆடுகள் போன்ற பல்வேறு வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம்.
உத்தரகாண்ட், தவுலாவில் துவங்கி ஹிமாச்சலப் பிரதேசம், சாங்க்லாவில் ரூபின் கணவாய் முடிவடைகிறது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான மலையேற்ற பாதைகளில் ஒன்று; சாகச பிரியர்களுக்கு பிடித்தமானது.
கின்னூரின் நுழைவாயில் என சர்ஹான் கிராமம் அழைக்கப்படுகிறது. ஆப்பிள் தோட்டங்கள், பைன் மரங்கள், பாரம்பரியக் கோவில்கள் என கண்களுக்கு விருந்து படைக்கிறது.
சிலிர்க்கும் அனுபவத்தை பெற விரும்பினால், கல்பாவிலிருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள சூசைட் பாயின்ட் வழியாக செல்லலாம். சாகசப்பிரியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் இது.