இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் சில...!

இந்தியாவில் அதிகளவில் பார்க்கப்படும் இடங்களில் முக்கிய பட்டியலில் இருப்பது தாஜ்மஹால். காதல் சின்னமாக பார்க்கப்படும் இது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.

மும்பையின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இந்தியாவின் நுழைவாயில் (கேட்வே ஆப் இந்தியா) ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் விசிட் செய்கின்றனர்.

அமர்-கா-கிலா, ஆம்பர் கோட்டை, ஆம்பர் அரண்மணை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அமர் கோட்டை, ஜெய்ப்பூரில் மலை உச்சியின் மேல், பிரமாண்டமாக வீற்றிருக்கிறது.

புதுடில்லியில் உள்ள பிரமாண்டமான செங்கோட்டை 1648ல் ஷாஜஹானால் கட்டப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

கர்நாடகாவில் கட்டாயமாகப் பார்க்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்று மைசூரு அரண்மனை.

இந்திய பாரம்பரியத்தையும், வரலாற்றையும் நினைவுகூறும் பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவை மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்திலுள்ள அஜந்தா குகைகள்.