முடி உதிர்வை தடுக்க உதவும் புரூட்ஸ் ஹேர்மாஸ்க்..!
மாம்பழத்தை துண்டுகளாக்கி பேஸ்ட் போன்று அரைத்து 2 அல்லது 3 டீஸ்பூன் தயிர், 1 முட்டை மஞ்சள் கருவை சேர்த்து கலக்கி கொள்ளுங்கள். அதனை அப்படியே முடியில் அப்ளை செய்யுங்கள். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு, சாதாரண ஷாம்பூ கொண்டு முடியை அலசுங்கள்.
கிவி பழத்தை உள்ள சதைப்பகுதி 2 டீஸ்பூனுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு டீஸ்பூன் வெங்காய ஆயிலை சேர்த்து, நன்கு பேஸ்ட் போல கலக்கி கொள்ளுங்கள். தலையில் நன்கு தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஆனவுடன், ஷாம்பூ மூலம் கழுவுங்கள்.
ஒரு டம்ளர் கொதிக்க வைத்த தண்ணீரை எடுத்து அதில், நறுக்கப்பட்ட வாழைப்பழம், கேரட்டை சேர்க்கவும். நன்கு பேஸ்டாக மாறும் வரை நன்கு கலக்கி, தலையில் தடவி மசாஜ் செய்யவும். சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், ஷாம்பூ மூலம் கழுவுங்கள்.
பப்பாளி சதைப்பகுதியை எடுத்து நன்கு அரைத்து, அதில் அரை டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் போல கிளறுங்கள். முடியில் அதனை தடவி, 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளித்து விடுங்கள்.