புரட்டாசி மாதம் தொடங்கியாச்சு...அசைவ பிரியர்களுக்கான சூப்பர் ஸ்நாக்ஸ்..!
சைவத்தில் அசைவம் ருசியை கொடுக்கும் காளான்-65 வீட்டிலேயே செய்வது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
10 காளான்களை நன்றாக கழுவி, அதன் தண்டுகளை நீக்கிவிட்டு, சில்லி சிக்கன் செய்யும் அளவிற்கு நறுக்கி கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் 1/2 கப் மைதா, 1/2 கப் சோள மாவு, 2ஸ்பூன் மிளகாய் தூள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, மாவு கலவையுடன் காளான் துண்டுகளை சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து காய்ந்ததும், அதில் காளான் துண்டுகளை போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
இந்த காளான் 65ஐ கெட்ச்அப் உடன் சேர்த்து மாலை வேளையில் தேநீருடன் சூடாக பரிமாறவும்.