ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நிகழ்ச்சி நிரல்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்க உள்ளது.
மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.
கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்க உள்ளது.
இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம்.
இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்ய உள்ளார்.
விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள் உள்பட, 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர்.
10 ஆயிரத்துக்கும் அதிகமான சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.