முகத்தைப் பொலிவாக்கும் பாலாடை!
பாலாடையில் புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
பாலாடை சிறத்ந மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது.
இதில் லாக்டிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் . பருக்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.
சருமக் கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளை தாமதப்படுத்தும்.
வறண்ட சருமத்தை மெருதுவாக்க ஒரு ஸ்பூன் பாலாடையை எடுத்து 15-20 நிமிடங்கள் முகத்தில் போட்டு மசாஜ் செய்யலாம்.
சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ் பேக்காகவும் உபயோகிக்கலாம். சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும்.
பளபளப்பான சருமத்தை பெற 1 டீஸ்பூன் பாலாடையுடன் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.
ஒரு ஸ்பூன் பாலாடையுடன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்பேக் செய்யலாம். சருமப் பிரச்னைகள் நீங்கும்.