இந்தியாவில் அழகிய கடற்கரைகள் சில !

கேரளாவின் அழகிய பேக் வார்ட்டர்ஸில் பின்னணியில் அமைந்துள்ள மராரி கடற்கரை ரம்மியமான சூழலை அளிக்கிறது.

ஹிந்தியிலுள்ள ஆன்மிக ஒலியான ஓம் வடிவத்தை போன்று கர்நாடகாவில் உள்ள ஓம் கடற்கரை காட்சியளிப்பது பிரமிக்க வைக்கிறது.

சுற்றிலும் மரங்கள், வெள்ளை மணல், கற்பாலம் என வெகுவாக கவர்கிறது புதுச்சேரி, செரினிட்டி கடற்கரை.

கோவாவில் உள்ள பட்டாம்பூச்சி கடற்கரைக்கு ஹனிமூன் தம்பதிகள் அதிகளவில் விசிட் செய்வதால், 'ஹனிமூன் பீச்' என அழைக்கின்றனர்.

ஒடிசா, அஸ்தரங்க கடற்கரையில் பறவைகள் அதிகளவில் காணப்படுவதால், புகைப்பட கலைஞர்கள் குவிகின்றனர்.

மே.வங்கம், மந்தர்மணி கடற்கரையில் அலைகளின் சப்தத்துக்கு இடையே, சூரிய அஸ்தமனத்தை பார்க்கும் காட்சி, மயக்கும் மாலைப் பொழுதாக அமைகிறது.