கோடை வெயிலுக்கு ஏற்ற கிராப் டாப்ஸ் .. இப்போதும் டிரெண்டிங்!
வெயில் காலத்திற்கு ஏற்றாற்போல கிராப் டாப்ஸ் என்ற ஆடை ட்ரெண்டாகி வருகிறது.
கிராப் டாப்ஸ் என்பது டீ சர்ட் போன்றது ஆனால் கழுத்தில் தொடங்கி இடுப்பு வரை மட்டுமே இருக்கும். சர்ட் போன்று மட்டுமில்லாமல் பல்வேறு டிசைன்களில் கிடைக்கும்.
கோடை வெயிலுக்கு ஏற்ற ஆடையும் கூட. அவை காற்று வாங்க ஏதுவாகவும், நவநாகரீகமாகவும் இருக்கின்றன
சில டாப் இருந்தால் போதும், மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து பல ஆடைகளாக அணிந்து கலக்கலாம்.
ஐந்நூறு ரூபாய் முதல் கிடைக்கும் இந்த வகையான இண்டோ-வெஸ்டர்ன் உடைகள், மார்டன் உடை விரும்பிகளுக்கு மிகவும் ஏற்றது.
இதற்கு மேட்சிங்காக ஜீன், பலாஸோ பேன்ட், லாங் ஸ்கர்ட், சார்ட் ஸ்கர்ட் போன்றவற்றை அணியலாம்.
புடவைக்கும் ஸ்டைலாக இருக்கும். புடவை என்றாலே பிளவுஸ்தான் என்பதை மாற்றி, தற்போது ட்ரெண்டில் இருப்பது கிராப் டாப் தான்.
ஆண்கள் பெண்கள் அதை சரியான ஸ்டைலில் அணிவது எப்படி என்று தெரிந்தால், நண்பர்கள் மத்தியில் அசத்தலாம்.