தேர்வு எழுதும் மாணவர்களுக்கான டயட் பிளான்!

தேர்வு எழுதும் மாணவர்கள் சரியான நேரத்தில் போதுமான அளவு சாப்பிட வேண்டும். முக்கியமாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.

காலையில் இட்லி, ஆப்பம், இடியாப்பம் போன்ற உணவுகள் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

மதியம் பருப்பு, காய்கறி, தயிர் கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். வயிறு முட்டச் சாப்பிடாமல் தேவையான அளவு சாப்பிட வேண்டும்;.

அதே போல் இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

ஸ்நாக்ஸாக பாதாம், பிஸ்தா, பேரிச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றை கொண்டு தயாரித்த மில்க் ஷேக்கையும் குடிக்கலாம்.

உடலைச் சுறுசுறுப்பாக மோர், பழச்சாறு, சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது உடல் சூட்டையும் இந்த கோடையில் குறைக்கும்.

வறுத்த, பொரித்த இறைச்சியைவிட குழம்பில் உள்ள இறைச்சி உணவைச் சாப்பிடுவது நல்லது. முக்கியமாக கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

கடையில் போய் சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முடிந்தவரை வீட்டு உணவையே சாப்பிடுவது அவசியம்.