சைவ உணவர்கள் இந்த பருப்பு வகைகளை டயட்டில் அடிக்கடி இடம்பெறச் செய்யுங்கள்!

சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் முக்கிய ஆதாரமாக பருப்பே உள்ளது.

இந்திய பாரம்பரிய உணவு வகைகள் வேகவைத்த பருப்பு சேராமல் முழுமைப் பெறாது. சாம்பார், கூட்டு, பொரியல், கீரை என பலவற்றில் பருப்பு இடம்பெறும்.

பாசிப்பருப்பில் மாங்கனீசு, மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிரம்பியுள்ளதால், எளிதில் ஜீரணம் ஆகும்.ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தக் கூடியது.

துவரம் பருப்பு ஃபோலிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக துவரை இருப்பதால், நரம்புக் குழாய் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும்.

உளுந்தப் பருப்பு எலும்புகளை பலப்படுத்தக் கூடியது. தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கும் உதவும். உளுந்தை உடைத்து கஞ்சியாகவும் பருகலாம்.

வறுகடலை ஊட்டச்சத்து நிரந்தவை. இதில் உள்ள நார்ச்சத்து குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சியை ஊக்குவித்து, எலும்பை பலப்படுத்துகிறது.