எடை இழப்புக்கு உதவும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் !

வேர்காய்கறியான பீட் ரூட்டில் இரும்பு, காங்கனீசு, பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக 100 கிராம் பீட்ரூட்டில் இரண்டு கிராம் நார்ச்சத்து உள்ளது.

ப்ரோக்கோலியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்பு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் 100 கிராமுக்கு 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழந்தைகள் உட்பட பலருக்கு பிடித்தமானது. 100 கிராம் வேக வைத்த கிழங்கில் மூன்று கிராம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடக்கூடிய கேரட்டில் வைட்டமின் கே, பி6, மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் 100 கிராமுக்கு 2.8 கிராம் நார்ச்சத்து உள்ளது.

இதேப்போல், முட்டைக்கோஸ், கீரை மற்றும் தக்காளி உட்பட பல்வேறு காய்கறிகளில் நார்ச்சத்துகள் உள்ளன.

உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியமான ஒன்றாகும்.

இது எடை இழப்புக்கு உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.