குழந்தைகளிடம் ஆபத்துக்கு வழிவகுக்கும் ஜங்க் புட்

எண்ணெயில் பொறித்த, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் 'ஜங்க் புட்' ஆபத்துக்கு வழிவகுக்கிறது.

ஐந்து நிமிட 'ஜங்க் புட்' விளம்பரம், குழந்தைகள் அதிக கலோரிகளை உட்கொள்வதற்கு காரணமாகிறது என ஐரோப்பிய ஆய்வு தெரிவித்துள்ளது.

அதில், 7 - 15 வயது குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியதில் 'ஜங்க் புட்' விளம்பரத்தை பார்த்த பின், சராசரியாக 130 கலோரி உணவு கூடுதலாக எடுக்கின்றனர்.

அதே நேரம் உணவு அல்லாத விளம்பரத்தை பார்த்து விட்டு சாப்பிடும் போது 73 கலோரி என்ற அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதிலுள்ள அதிகளவிலான அமிலம் பசியின்மை, வயிற்றுப்புண், வயிற்றில் ரத்தக்கசிவுக்கு வழிவகுக்கும். கேன்சர் உண்டாகவும் வாய்ப்புள்ளது.

கொழுப்பு செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால், உறுப்புகளுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறையும்; மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.