தமிழில் தடம் பதிக்கும் மிருணாள் தாக்கூர்
நடிகை மிருணாள் தாக்கூர் ஹிந்தியில் நடித்த ஒரு சில படங்கள் பெரிதளவில் எதுவும் வெற்றி பெறவில்லை.
பின்னர், அவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம், ஹாய் நானா போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்தது.
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்.
தெலுங்கைத் தொடர்ந்து தமிழ் படங்களில் இவர் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவின் படங்களில் ஹீரோயினாக நடிக்க மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இருமலர்கள் டிவி சீரியல் மூலமாக மிருணாள் தாக்கூர் ரசிகர்களிடம் பரிட்சயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.