இஞ்சி... கொஞ்சம் கவனமாக இருங்க !
தினமும் குறிப்பிட்டளவுக்கு மேல் இஞ்சி சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.
நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிகளவில் இஞ்சியை உட்கொள்ளும் போது, இதிலுள்ள பிளேட்லெட் எதிர்ப்பு (ரத்தத்தை மெலிக்கும்) பண்புகள் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது
இஞ்சி செரிமானத்துக்கு உதவுகிறது. ஆனால், வெறும் வயிற்றில், அது செரிமானக் கோளாறு மற்றும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான இஞ்சியை உட்கொள்வது ஒருசிலருக்கு வாய்வழி ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். இதனால் வாய் வீக்கம், எரிச்சல் உண்டாகலாம்.
அதிகமாக இஞ்சியை உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.