மாணவர்களின் நினைவு திறனை அதிகரிக்கும் தியானங்கள்
மூச்சு பயிற்சி பதட்டத்தைக் குறைப்பதற்கும், தூக்கத்தைப் பெறுவதற்கும் இது சிறந்த தியானங்களில் ஒன்றாகும்.
நினைவாற்றல் தியானம் தேர்வு சமயத்தில் மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகாமல் இருக்க உதவும்.
மெட்டா தியானம் கோபம் மற்றும் விரக்தியை விரட்டும். முதலில் அமைதியாக வசதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொண்டு மூச்சை மெதுவாக மற்றும் ஆழமாக இழுத்து சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மந்திர தியானம் வெளிப்பாடு, நன்றியுணர்வு மற்றும் சுய அன்பை வளர்க்க உதவுகிறது.இதை நீங்கள் ஓம் என்ற அடிப்படை மந்திரத்துடன் தொடங்கலாம். இது மாணவர்களிடம் கவனித்தல் திறனை அதிகரிக்க உதவுகிறது.
தியானம் செய்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்தவும், கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்தவும் கற்றுக் கொள்ளலாம்.