கலோரியை அளவிடுவது எப்படி?

சாப்பிடும் உணவில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை தான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.

அப்படி நாம் சாப்பிடும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அல்லது ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு தான் கலோரி.

உடல் தனக்கு தேவையான கலோரியை மட்டும் எடுத்து கொண்டு மீதம் இருக்கும் ஆற்றலை கொழுப்பாக மாற்றி விடும்

அதனால் ஒருவருக்கு தேவையான கலோரியை கண்டுபிடிக்க உங்களுக்கு BMR (Basal metabolic rate)பார்முலா தெரிந்தால் போதும்.

உடல் எடை, வயது, பாலினம், உயரம் போன்றவற்றை பொறுத்து ஒருவரின் BMR வேறுபடும்.

ஆண்களுக்கான பிஎம்ஆர் பார்முலா = (10×wt) + (6.25 × Ht (cm)) - (5 × Age (yrs)) + 5

பெணகளுக்கான பிஎம்ஆர் பார்முலா = (10×wt) + (6.25 × Ht(cm)) - (5 × Age (yrs)) - 161

கடின உழைப்பாளிகள், கூடுதல் கலோரிகள் தரக்கூடிய உணவுமுறையைக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அலுவலக வேலை போன்ற உடலை வருத்தாமல் வேலைகள் செய்பவர்களுக்கு, சற்று குறைந்த அளவு கலோரிகள் தரக்கூடிய உணவுப் பொருட்களே போதுமானது.