புற்றுநோய் பாதிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
புற்றுநோயை பொறுத்த வரை உடம்பின் உள் பகுதியில் கட்டியாகவும், வெளிப்பகுதியில் புண்ணாகவும் தோன்றும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் வருகிறது. இது மரபு வழியும் ஏற்படுகிறது.
புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்த 'பயாப்சி ' எடுத்து பரிசோதிக்க வேண்டும்.
ஹீமோதெரபி, ரேடியோ தெரபி மூலம் சிறிய கட்டிகளை சரி செய்து விடலாம். ஆனால் பெரிய கட்டிகளை கரைக்க முடியாது.
புற்று நோயில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையிலேயே டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றால் எளிதாக குணப்படுத்தி விடலாம்.
பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகளை தவிர்த்து, மாடி தோட்டம் அமைத்து நாமே உற்பத்தி செய்து காய்கறியை பயன்படுத்தலாம்.
குறிப்பாக பாக்கெட் உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.