இளைஞர்களோடு ரோட்டில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிய சச்சின்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்தியவர்; இவரின் சாதனைகள் ஏராளம்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றநிலையில், கிரிக்கெட் தொடர்பான பணிகளில் இன்னமும் 'பிஸி'யாகவே உள்ளார்.
இதற்கேற்ப ரசிகர்களின் அன்பும், பாசமும் சச்சினிடம் மாறாமல் அப்படியே உள்ளது. அவ்வப்போது செல்லுமிடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரிடமும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்வார்.
இந்நிலையில், சமீபத்தில் காஷ்மீர் சென்ற சச்சின், கும்லார்க் அருகே உள்ளூர் இளைஞர்களுடன் ரோட்டிலேயே கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
அதில், முதல் 5 பந்துகளையும் சரியாக அடித்த சச்சின், பின்னர் கிரிக்கெட் பேட்டை தலைகீழாக பிடித்தவாறு, கடைசி பந்தில் என்னை அவுட் ஆக்குங்கள் பார்க்கலாம், என சவால் விட்டார்.
ஆனால் அவரை பவுலரால் அவுட் ஆக்க முடியவில்லை; கடைசி பந்தை பேட்டின் கைப்பிடியால் துல்லியமாக தடுத்தார் சச்சின்.
தொடர்ந்து, அங்கிருந்த ரசிகர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இந்த வீடியோவை சச்சின் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாகி வருகின்றனர்.