செஸ் ஒலிம்பியாட்...!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை மறுநாள் துவங்கி, ஆக., 9ம் தேதி வரை நடக்கிறது.
இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகளைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதன் துவக்க விழா, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியை துவக்கி வைக்கிறார். ஆக., 10ல் நிறைவு விழா நடக்கிறது.
இதற்காக நாளை பிற்பகல் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலையில் வருகிறார் மோடி.