அசத்தலான செட்டிநாடு கத்தரிக்காய் தொக்கு !
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு, கசகசா, 15 முந்திரிப்பருப்பு, 3/4 டே.ஸ்பூன் பொட்டுக்கடலை, 2 டே.ஸ்பூன் துருவிய தேங்காய், தலா 2 ப.மிளகாய், வர மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து நன்றாக அரைக்கவும்.
முழுது முழுதாக நறுக்கிய 1/4 கிலோ கத்தரிக்காயை கடாயில் எண்ணெய் ஊற்றி குறைவான தணலில் பொறித்தெடுக்கவும்.
சிறிது சோம்பு, வெந்தயம், பட்டை கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய 2 பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும்.
பின், மஞ்சள் தூள், நறுக்கிய 2 தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்க்கவும்.
அப்போது 2 நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி இலை, எலுமிச்சை அளவு புளி கரைத்த தண்ணீர் சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றியவுடன் அரைத்து வைத்த மசாலா, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
இந்த கலவை நன்றாக கொதித்து வற்றியவுடன் மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும். அப்போது, பொறித்த கத்தரிக்காயை சேர்க்கவும்.
தொடர்ந்து சிறிது நல்லெண்ணெய், நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டால், இப்போது, செட்டிநாடு கத்தரிக்காய் தொக்கு ரெடி.