ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் ஸ்பெஷல் மொமண்ட்ஸ்…
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்வு கோலாகலமாக நடந்தது.
சிறு வயதில் இருந்தே பல உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து உள்ளேன். ஆனால், என் அப்பாவும், அம்மாவும் ஒரு நாளும் என்னைக் கைவிட்டது இல்லை என அனந்த் அம்பானி பேச்சியது முகேஷ் அம்பானியை கண்கலங்க வைத்தது.
ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபல பாப் பாடகி ரிஹானாவின் கான்சர்ட் நிகழ்வு நடந்தது.
ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு, ஷாரூக்கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோருடன் ஆர். ஆர்.ஆர். படத்தின் ஹீரோ ராம் சரணும் இணைந்து நடனம் ஆடினார்.
மேலும் சாகச விலங்குகள் நிகழ்ச்சி, கண்கவர் ட்ரோன் கண்காட்சி உள்ளிட்ட மெய்சிலிர் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
கிட்டத்தட்ட 2,000-க்கும் அதிகமான வி.ஐ.பி விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர்.
வரும் ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமர்சையாக நடக்க உள்ளது.