ஓணம் ஓணம் பொன்ஓணம்! அத்தம் பற்றிய திருவோணம்!! இன்று ஓணம்
ஆவணி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரம், துவாதசி திதியன்று வாமன மூர்த்தியாக அவதரித்தார் மகாவிஷ்ணு.
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் திருவோணம் பண்டிகை முக்கியமானதாகும்.
இந்த பண்டிகையை மட்டும் மலையாள மொழி பேசும் மக்கள் மத, சாதி வேறுபாடு இன்றி உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.
இந்த பண்டிகை உருவானதற்கு மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறும், புராண கதையும் தான் முக்கியமாக கூறப்படுகிறது.
கடவுளுக்கு சொந்தமான இந்த பிரபஞ்சத்தையே தனக்கு சொந்தமாக்க விரும்பினான் மகாபலி. அதற்காக நர்மதை நதிக்கரையில் யாகம் ஒன்றை நடத்தினான்.
அதை தடுக்க வாமன அவதாரம் எடுத்து வந்து மூன்றடி தானம் கேட்டார் மகாவிஷ்ணு.
அவரின் திருவடி தலையில் பட்டதும் இடத்தை மட்டுமல்ல, தன்னையே காணிக்கையாக கொடுத்தான் மகாபலி.
கடவுளான மகாவிஷ்ணுவுக்கே இந்த உலகத்தின் பட்டா சொந்தம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.