குளோரின் கலந்த குடிநீராலும் புற்றுநோய் ஆபத்து.. ஆய்வில் தகவல்

முன்பு குடிநீரில் குளோரின் சேர்த்து கிருமி நீக்கம் செய்யப்பட்டது. இது நுண்ணுயிர் தொற்றுகள், நீரினால் பரவும் நோய்களான காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை வெகுவாகக் குறைத்தது.

இந்நிலையில் குளோரின் கலந்த குடிநீர் பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புக்கு வழிவகுக்கும் என சமீபத்தில் என்விரான்மென்டல் ஹெல்த் பெர்ஸ்பெக்ட்டிவ் வெளியிடப்பட்ட ஆய்வு கூறியுள்ளது.

குடிநீரில் பயன்படுத்தப்படும் குளோரின் சில தீங்கு விளைவிக்கும் கூறுகளை உருவாக்கலாம்; இது நீண்ட காலத்திற்கு உடலில் குவிந்து புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்நீரை தொடர்ந்து குடிக்கும்போது, குறிப்பாக வயிறு, புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயமுள்ளது.

இதன்படி, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 33 சதவீதமாகவும், பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இது மிகவும் ஆபத்தானது, கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.