கோடைக் காலம் என்பதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

பாத்திரங்களை கழுவும் போது நேரடியாக குழாயில் கழுவாமல், ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி கழுவவும்.

பல் துலக்கும்போதும், முகம் கழுவும் போதும் ஒரு மக்கில் நீரை நிரப்பி சிறுக சிறுக பயன்படுத்தவும்.

சாப்பிடுட்டு விட்டு கைக் கழுவ ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி பயன்படுத்தலாம்.

குளிக்க ஷவரை பயன்படுத்தாமல் வாளியில் நீரை நிரப்பி குளிக்கலாம்.

ஒரே முறையாக எல்லா துணிகளையும் சேர்த்து வைத்து மொத்தமாக வாசிங்க் மிசினில் போட்டு துவைக்கலாம்.

வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்தாமல் முடிந்த வரை இந்திய டாய்லட்டை உபயோகிக்கலாம்.

வாகனங்களை தண்ணீர் குழாய் மூலம் கழுவாமல் ஈரத்துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்யலாம்.

நிறைவாக தினமும் வீட்டில் எந்த குழாய்களிலும் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.