இந்த கோடைக்கு மத்திய பிரதேசத்தில் பார்க்க வேண்டிய ஆஃப்பீட் மலைவாசஸ்தலங்கள் !
'சத்புரா ராணி' என அன்புடன் அழைக்கப்படும் பச்மாரி, மத்தியப் பிரதேசத்தின் பிரபலமான மலைவாசஸ்தலம். பசுமையான காடுகள், பழங்கால குகைகள், அருவிகள் என மெய்சிலிர்க்க வைக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 656 மீ., உயரத்தில் அமைந்துள்ள இந்த சாந்தேரி பாரம்பரியம், இயற்கை அழகுடன் மிளிர்கிறது. மலை மீது கம்பீரமாக உள்ள சாந்தேரி கோட்டை கூடுதல் அம்சமாகும்.
மலைகளின் பசுமைக்கு இடையே அமைந்துள்ள அமர்கன்டக், அமைதியான புனித யாத்திரைத் தலமாகும். இது நர்மதா, சன் மற்றும் ஜோஹிலா ஆகிய புனித நதிகளின் ஆதாரமாக நம்பப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 1,535 அடி உயரத்தில் அமைந்துள்ள ஷிவ்புரி, அழகிய நீர்வீழ்ச்சி, ஏரிகளுக்குப் பெயர் பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மலைவாசஸ்தலமான மண்டு, 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடக்கலை அதிசயமாகும். அரண்மனைகள், மசூதிகள் மற்றும் கல்லறைகளால் வரலாற்றை நினைவுகூறுகிறது.
நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க இயற்கை விரும்பிகள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு சிறந்த சாய்ஸாக டாமியா உள்ளது.