உணவை ஆரோக்கியமாக்க சில ஈஸி சமையல் டிப்ஸ்!
உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது, சிப்ஸ் போல் கிழங்கை சீவி, காய்ந்த மிளகாய், தனியா, பூண்டு, சீரகம், தேங்காய் எல்லாம் அரைத்து சேர்த்தால் வாசனை மூக்கைத் துளைக்கும்.
சூப் செய்த பிறகு, அதனுடன், இரண்டு தேக்கரண்டி பார்லி தண்ணீரை கலந்து குடிக்கவும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பிசிபேளாபாத் செய்யும்போது வெங்காயத்துக்குப் பதிலாக மணத்தக்காளி வற்றல் அல்லது சுண்டைக்காய் வற்றலை வதக்கி போட்டால், புதுவித சுவையோடு இருக்கும்.
பருப்பு பொடியுடன், சிறிது கசகசாவையும் வறுத்து பொடி செய்து சேர்த்தால் குழம்பு மற்றும் கூட்டு கெட்டியாக இருக்கும்.
வித்தியாசமான சுவையுடன், வைட்டமின் சி உள்ள வடகம் செய்ய முதலில் நெல்லிக்காய்களை வேக வைத்து, விதைகளை நீக்கி, மிக்சியில் விழுதாக அரைக்கவும். வடக மாவில் இதை சேர்த்து, கிள்ளிப் போட்டு காய வைத்து எடுக்கவும்.
ஜவ்வரிசி வடாம் துகள்கள் இருந்தால், அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப் போடுங்கள். பிறகு, பஜ்ஜி சுட்டு எடுத்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.
புள் பீன்சுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். இதை பக்கோடா மாவில் கலந்து செய்தால் புதுவிதமான சுவையுடன் இருக்கும்.
ப்ரிசரில் வைத்து கெட்டியான வெண்ணெயை, சூடான தோசைக்கல்லில் லேசாக தேய்த்து சப்பாத்தி, ரொட்டி, ரோஸ்ட் செய்தால், வித்தியாசமான ருசியுடனும், வாசனையுடனும் இருக்கும்.