ஏப்ரல் 2 : உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்!

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வழிகாட்டல் படி 2008ல் இருந்து உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 2ல் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தலைப்பு, வெற்றிகொடி நாட்டும் வாழ்வை நோக்கி நகர்தல், அதில் விழிப்புணர்வு, ஏற்றுக்கொள்ளல் மற்றும் பாராட்டல் உள்ளிட்டவை என்பதாகும்.

ஆட்டிசம் ஒரு நோய் அல்ல இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு.

குழந்தையின் 10 முதல் 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும்.

இக்குறைபாட்டுக்கான காரணத்தை மருத்துவ உலகம் உறுதியாக இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

மரபியல் பிரச்னை, குறைவான எடையில் குழந்தை பிறத்தல் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம், மருத்துவ குறைப்பாடு போன்ற பல காரணங்களால் ஆட்டிச பாதிப்பு வருவதாக கூறப்படுகிறது.

ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

ஆட்டிசத்துக்கு அன்பு ஒன்றே மருந்து. அன்பும் அறமும் உள்ள சமூகமாய் நாம் மாற வேண்டும் என்பதை உணர்ந்து இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழக வேண்டும். பிரி்த்து தணித்து பார்க்க வேண்டாம்.

நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் அளிக்கும் போது அவர்களின் உடல்திறன்கள் அதிகமாகும். தன்னுடைய வேலைகளைச் சுயமாகச் செய்ய பழகுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் வளரும்.