25 வருட கார் கனவு : ஆனந்தத்தில் அர்ச்சனா; கார் குறித்தும் தெரிந்துக் கொள்ளலாமா...

சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா தனது நீண்டநாள் கனவான மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார்.

இந்த காரின் மாடல் மெர்சிடீஸ்-பென்ஸ் ஜிஎல்சி. இதன் விலை ரூ. 75 என கூறப்படுகிறது.

மெர்சிடீஸ்-பென்ஸ் ஜிஎல்சி சி-கிளாஸ் செடானை அடிப்படையாகக் கொண்டது

ஒருங்கிணைந்த பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன், அனைத்து எல்இடி ஹெட்லேம்ப்களுக்கும் ஸ்மார்ட் வசதி உள்ளது.

புதிய GLC ஆனது டீசல் மற்றும் பெட்ரோல் பதிப்புகளில் 45kW சக்தியுடன் கூடியது.

பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் கிடைக்கும்.

25 வருடங்களாக தான் மீடியாவில் இருந்த காலத்தில், 24 வருடங்கள் இந்த கனவை நோக்கி தான் ஓடினேன். இது என் கனவு மட்டுமல்ல, எனது தந்தையின் கனவும் கூட என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.