அதிகரிக்கும் ஹீட் ஸ்ட்ரோக் : அறிகுறிகள் அறிவோமா..!

ஹீட் ஸ்ட்ரோக் என்பது வெப்ப அதிர்ச்சியின் காரணமாக எற்படும் பக்கவாதம். மேலும் இது ஒரு அவசர மருத்துவ நிலையாகும்.

இவை உடலின் வெப்பநிலை 40°C அல்லது அதற்கு மேல் அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் குறிப்பாக சூரிய வெளிப்பாட்டுக்கு அதிகப்படியாக உட்படும் போது ஏற்படும்.

நமது உடல் அதிக வெப்பநிலையினை பொதுவாக வேர்வையின் மூலம் வெளியேற்றி சமநிலைக்கு கொண்டு வர வழி செய்யும்.

ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் போது நமது உடல் அதை செய்ய தவறிவிடுகிறது.

குறிப்பாக கோடை காலத்தின் அதிக வெப்ப நிலை உள்ள போது நீண்ட நேர சூரிய வெளிப்பாட்டினால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும்.

வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப நீர் அருந்தாமல் தவிர்ப்பதுவே இதன் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்தியாவில் காலநிலை மாற்றத்தில் அதிகரித்த வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக்கை சார்ந்த இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிரித்துள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

மயக்கம், சோர்வு, குமட்டல், மூச்சு திணறல், வாந்தி, தலைவலி மற்றும் வேகமான இதய துடிப்பு ஆகியன இதன் அறிகுறிகள்.