தூக்கமின்மையால் சர்கார்டியன் ரிதம் மாறுபடலாம் !
முறையற்ற உணவுப் பழக்கம், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் செரிமானக் கோளாறால் சரியான துாக்கம் இருக்காது.
சிகரெட், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு முறையான துாக்கம் இருக்காது. சிலர் உடல் பாதிப்புக்கு எடுத்து வரும் மருந்துகளால் கூட துாக்கமின்மை ஏற்படும்.
பயம், பதற்றம், மன அழுத்தம், பணிச்சுமை, பண நெருக்கடி, குடும்ப பிரச்னை, தாம்பத்ய வாழ்க்கையில் அதிருப்தி உட்பட பல்வேறு காரணங்களால் துாக்கம் சரிவர இல்லாமல் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும்.
உலகம் இயங்குவதற்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது போல் நம் உடலில் இருக்கும் உறுப்புகள் இயங்குவதற்கும் கால நேரம் உள்ளது. அதற்கு பெயர் சர்காடியன் ரிதம்.
தூக்கமின்மை பிரச்னை தொடர்ந்தால் சர்காடியன் ரிதம் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு, தேவையில்லாத உடல் பாதிப்புகள் உண்டாகக்கூடும்.
துாக்கம் எளிதில் வருவதற்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தில் சில சிம்பிள் மருத்துவங்கள் உள்ளன.
இரவு படுக்கப் போகும் முன்பு ஒரு வாளியில் பொறுக்கும் அளவில் வெந்நீர் எடுத்து அதில் பாதத்திலிருந்து கெண்டைக்கால் வரை 20 நிமிடம் வைத்திருப்பது பலன் தரக்கூடும்.
படுக்க செல்வதற்கு முன் சுவாசப் பயிற்சி, தியானம் செய்யலாம்; மன நிம்மதி கிடைக்கும்.