படுக்கையை நனைக்கும் குட்டீஸ்.. தீர்வுகள் அறிவோமோ…

குழந்தைகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவு நேரத்தில் படுக்கையை நனைப்பது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி. இவை பொதுவான சிறுநீரகத் தொற்று பிரச்னைகளாக உள்ளன.

சிறுநீரகக் கோளாறுகள் வருவதற்கு முக்கிய காரணம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதில்லை.

சரியான உணவுப் பழக்கம் இருந்தால் தான் காலையில் மலம் கழிக்க வரும்.

மலம் கழிப்பதில் தினசரி ஒழுக்கம் இல்லாவிட்டால், தேங்கியுள்ள கழிவு சிறுநீர் குழாயின் மேல் பகுதியில் அழுத்தி, எரிச்சலை ஏற்படுத்தும்.

இது தவிர, பள்ளியில் இருக்கும் நேரத்தில், பல குழந்தைகள் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதும் சிறுநீர் பையில் பிரச்னையை ஏற்படுத்தலாம்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் மொபைல், டேப் என்று ஒரே இடத்தில் அமர்ந்து, நேரம் போவது தெரியாமல் இருக்கின்றனர். தண்ணீரும் குடிப்பதில்லை; சிறுநீர் வந்தாலும் எழுந்து போவதில்லை.

தினமும் மலம் கழிக்காவிட்டால், பெருங்குடலில் வாயு உற்பத்தி ஆகும். இது மிகவும் ஆபத்தானது.

இரவில் 9:00 மணிக்கு குழந்தையை துாங்க வைத்து, காலையில் 6:00 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் எழுந்ததும், கழிப்பறைக்கு செல்லும் பழக்கத்தை கற்றுத் தர வேண்டியது அவசியம்.