குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று போக்கு ஏற்படுகிறதா?

பிறந்த குழந்தைக்கு அடிக்கடி மலம் வெளியேறும்; அதனால் பயம் தேவையில்லை. ஆனால் 8 மாத குழந்தை என்றால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவுமுறை மாற்றம், தாய்ப்பால் குடிக்கும் அளவு, தாயின் உணவு பழக்கம் வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் இம்மாதிரி பாதிப்பு ஏற்படும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் தொற்று ஏற்படும்.

இது மட்டுமில்லாமல் சீதோஷ்ண நிலை காரணமாகவும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுபோக்கு ஏற்படக்கூடும்.

பாதிப்பை தவிர்க்க படுக்கையில் போர்வைத்துணி உள்ளிட்டவற்றை அடிக்கடி சுடுநீரில் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

குழந்தை சிறுநீர் அடிக்கடிகழிப்பதால் 'டயப்பர்' பயன்படுத்துவர்.'டயப்பர்' நிர்ணயிக்கப்பட்டநேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

சிறுநீர் கழிப்பது நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 6 முறையாவது இருக்க வேண்டும். அதனால் அடிக்கடி நீர் கொடுக்க வேண்டும்.

மேலும் தாய் சேய் பயன்படுத்தும் அறை, கழிப்பறைகளை சுகாதாரமாக தொடர்ந்து பராமரிப்பதும் சிறந்த தீர்வாக அமையும்.