கொழுப்பை குறைக்க உதவும் சூப்பர் ஃபுட்ஸ்...!

சோளத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவாக உள்ளது.

கிரீன் டீ உடன் ஐஸ்கட்டி சேர்த்து உட்கொள்ளும் போது, புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமின்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சுரைக்காயில், கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்கலாம்.

ஆளி விதையில் அதிக அளவிலான நார்ச்சத்தும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உள்ளது. இவை இரண்டும் கொழுப்பை குறைக்க உதவுகின்றன.

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்பும்போது சாப்பிடச் சிறந்த உணவாக உள்ளது.

இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பினை கரைக்க உதவுகின்றது.