உங்கள் உணவை மிகவும் சுவையாக்க சமையல் டிப்ஸ்!
அரைக்கீரை, முளைக்கீரை அதிகமாக வாங்கி மீந்து விட்டால், அவற்றை ஆய்ந்து நல்ல வெயிலில் காய வைக்கலாம்.
நன்கு காய்ந்ததும் அவற்றை கறிவேப்பிலை பொடி போல் உப்பு, மிளகு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
மற்ற பொடிகளை போல், நெய்யுடன் சாதத்தில் கலந்து சாப்பிட, சூப்பராக இருக்கும்
பஜ்ஜி மாவில், ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி ஊற்றி, பின், மாவை கரைத்து பஜ்ஜி சுட்டால், வாசனையாக இருக்கும்.
மேலும் எண்ணெய் குடிக்காது; குறிப்பாக எண்ணெய் கோர்த்துக் கொள்ளாது. மொறு, மொறு என்று பஜ்ஜி இருக்கும்.
வாழைக்காய் சிப்ஸ் செய்யும்போது, எண்ணெய் சூடானதும், சீவும் கட்டையை வாணலியின் மேல் பிடித்து வாழைக்காயை சீவவும்.
இப்படி செய்தால், சிப்ஸ் நமுக்காமல் இருக்கும். பொரித்த சிப்ஸை வடிதட்டில் போட்டு, உப்பு, மிளகுப்பொடி துாவி கலந்து விடுங்கள். கடையில் வாங்குவதை விட ருசியாக இருக்கும்