முலாம் பழத்தை வாங்கும்முன் இதையெல்லாம் பாருங்க !
கொளுத்தும் வெயிலை சமாளிக்க ஆரோக்கியமான பழங்களை தேடினால் கண்முன் நிற்பதில் முலாம் பழமும் ஒன்று.
நீர்ச்சத்து நிறைந்த இந்த முலாம்பழங்களில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.
முலாம்பழம் வாங்கும்போது அதன் நிறத்தை சரிபார்க்க வேண்டும். பழத்தின் ஓடுகளில் பச்சை நிறம் தென்பட்டால் அது பழுக்காத காய். க்ரீம் போன்ற மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது பழுத்த பழம்.
பழத்தின் அடிப்பகுதியை நுகர்ந்து பார்த்தால் இனிய வாசம் வீசினால் கனிந்துள்ளதாக தெரிந்து கொள்ளலாம்.
கனிந்த முலாம்பழத்தின் உள்ளேயுள்ள கூழ்பகுதி எளிதான எடையில் இருக்கும். அதுவே காய் என்றால் மிக கனமானதாக இருக்கும். எனவே, பழத்தை எடுக்கும்போதை அதன் எடையை வைத்து உணரலாம்.
நன்றாக பழுத்த முலாம்பழத்தில் தண்டு தானாக பிரிந்து விழுந்துவிடும். அப்படியே தண்டு இருந்தாலும் நுனிப்பகுதி உருண்டையாக, மென்மையாக உள்ளதா என பார்க்கவும்.
பழத்தின் ஓட்டில் விரலால் சுண்டினால் மென்மையான் ஒலி கேட்டால் பழம் நன்றாக பழுத்ததாக அர்த்தம். கனமான ஒலி என்றால் இன்னும் காயாகவே இருக்கக்கூடும்.