குழந்தைகளை பாதிக்கும் சோம்பேறிக் கண் பிரச்னை… அறிகுறியும் தீர்வும்…
சோம்பேறிக் கண் பாதிப்பு ஆங்கிலத்தில் அம்ப்லியோபியா அல்லது லேசி ஐ என அழைக்கப்படுகிறது.
ஒரு கண்ணில் தெளிவான பார்வையும், மறு கண்ணில் தெளிவற்ற பார்வையும் இருப்பதை தான் லேசி ஐ என்பார்கள்.
பொதுவாக விழி வரிசை அமைப்பு சரியாக இல்லாததால் இவை ஏற்படும்.
அதுமட்டுமில்லாமல் பார்வையுடன் தொடர்புடைய மூளையின் வளர்ச்சியில் ஏதாவது தடங்கல் ஏற்படும்போது சோம்பேறிக் கண் உண்டாகலாம்.
மிகவும் அரிதாக குழந்தையின் ஒரு கண்ணில் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை இருந்தாலும் வரலாம்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு கண் பரிசோதினை மிகவும் அவசியம்.
இரண்டு கண்களில் பாதிக்கப்பட்ட பார்வைத்திறன் குறைவாக உள்ள கண்ணை அதிகமாகப் பார்க்க வைக்கச் செய்ய வேண்டும். இது தான் முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
பார்வையில் குழப்பம் தெரியும் குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பே கண் மருத்துவரிடம் ஒரு செக்கப்பிற்கு அழைத்து செல்வது மிகவும் நல்லது.
சோம்பேறிக் கண் பாதிப்பு உள்ள குழந்தையின் 8 வயதுக்குள், பிரச்னையை சரிசெய்ய வேண்டியது மிக முக்கியம் என கண் மருத்துவர்கள் வலியுறுகின்றனர்.