பாதங்களை தினமும் மசாஜ் செய்வதால், ஆரோக்கியமான தூக்கம், பார்வைத்திறன் மேம்பாடு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

பாதங்கள் நாம் பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் ஆகும். அவற்றைக் கவனித்து மசாஜ் செய்வது நம்மைப் பூமியில் உடலை நிலைநிறுத்த உதவும்.

ஒரு நல்ல பாத மசாஜ் உங்களை மாத்திரையை விட வேகமாகத் தூங்க வைக்கும்.

பாதங்களை மஜாஜ் செய்வதன் மூலம் கால் ஆரோக்கியம் அதிகரிக்கும், மூட்டுகள் மற்றும் தசைகளைப் பலப்படுத்தும்.

சிறிது வெதுவெதுப்பான எண்ணெயை எடுத்து,பாதங்களில் மெதுவாக மசாஜ் செய்யவும். கால் விரல்களிலிருந்து தொடங்கி கீழே வரை செய்ய வேண்டும்.

பாதங்களில் காயங்கள், வெட்டுக்கள், கீறல்கள் அல்லது கடுமையான தொற்று இருக்கும் போது மசாஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.