இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம்! நாஸ்ட்ரடாம்ஸ் கணித்தாரா?

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராக எந்த நிமிடமும் வெடிக்கலாம் என அமெரிக்கா அண்மையில் எச்சரித்தது.

ஏப்ரல் 14ல் இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. இதனால் போர் பதற்றம் அதிகரித்தது.

பல மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவும் வகையிலும், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாக்கவும், கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்து களத்தில் குதிக்க தயாராகி உள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற இக்கட்டான சூழல் நிலவுகிறது.

பிரான்ஸை சேர்ந்த நாஸ்ட்ரடாம்ஸ் 16-ம் நூற்றாண்டில் எழுதிய புத்தகத்தில் 2024-ம் ஆண்டில் உலகம் மிகப் பெரிய கடற்படை போரை பார்க்க நேரிடும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு உண்மையாகுமோ என இணையவாசிகள் தங்கள் அச்சத்தை பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவசர உதவி தேவைப்பட்டால், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை 972 - 5475207112, 972 - 543278392 எண்களிலும், cons 1.telaviv@mea.gov.in இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.