பொடுகு தொல்லைக்கு ஈஸி டிப்ஸ் இதோ!
தினமும் தலைக்கு குளித்தாலே பொடுகு குறைவதை காணலாம். எனவே முடிந்தளவு தினமுமோ அல்லது அடிக்கடியோ தலைக்கு குளிக்கலாம்.
சீயக்காய் பொடி கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி பொடுகை தவிர்க்கவும் உதவுகிறது.
வேப்பிலையை சிறிது தண்ணீரில் காய்ச்சி, ஊறவைத்து தலைக்கு குளிக்கும் போது முதலில் பயன்படுத்தலாம். இதிலுள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் பொடுகை தவிர்க்க உதவுகிறது.
ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ள நெல்லிக்காய் உடன் சிறிதளவு துளசி இலைகளை சேர்த்துத் அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து அலசினால் நாளடைவில் பொடுகுத் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.
கற்றாலை ஜெல்லை தலைக்கு ஊற வைத்து குளிக்கலாம். இது குளிர்ச்சித் தன்மை உடையதால் 10 நிமிடம் மட்டும் ஊறவைத்தால் போதுமானது.
தலைக்கு கேப் அணியும் போது வியர்வை காரணமாக பொடுகுத்தொல்லை அதிகரிக்கக்கூடும். எனவே, முடிந்தளவு தலைக்கு தொப்பி அணிவதை தவிர்க்கவும்.