அரிசியும்...பாரம்பரியமும்-குடலை வலுவாக்கும் குடவாழை அரிசி....!
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரக வகைகளில் ஒன்று குடவாழை அரிசியாகும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.
குடவாழை அரிசியில் தினமும் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் பலம் பெறும்.
இந்த அரிசியை தினமும் எடுத்துக் கொள்வதனால், உள் உறுப்புகள் பலமடைவதுடன், தேகம் பளபளப்பாகும்.
பாக்கெட்டில் அடைத்த உணவுகளை எடுத்துக் கொள்வதனால் பலருக்கும் செரிமான
பிரச்னைகளை ஏற்படுகிறது. இதை தடுத்து செரிமானத்தை குடைவாழை அரிசி தூண்டும்.
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளால் தோல் பிரச்னை ஏற்படும். இதை தடுக்க
குடைவாழை அரிசியை உணவாகவும், பதார்த்தங்களாகவும் எடுத்துக் கொண்டால்
குணமாகும்.
குடைவாழை அரிசியை மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
நாள்பட்ட கழிவு தேக்கம், குடல் ஆரோக்கியம், வயிறு பிரச்னைகளை இந்த குடவாழை அரிசி நீக்கும்.
இந்த குடவாழை அரிசியில் நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புசத்து அதிகம்
உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க
உதவுகிறது.