இந்தியாவில் கணவர் பாராட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

கணவர்களின் அன்பு, ஆதரவு மற்றும் குடும்பத்திற்கான பங்களிப்புகளுக்காக அவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கணவருடன் சிறப்பாக கொண்டாடுங்கள்.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக, அன்பை பரிமாறி இந்த நாளை ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள்.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது என காதல் கடிதம் எழுதலாம்.

என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி என பாடிக்கொண்டே ஒரு ட்ரிப் அடிக்கலாம்.

உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா… இப்படியாக பிடித்த உணவை சமைத்துக் கொடுக்கலாம்.

ஏயா என் கோட்டிகாரா, நீதான் என் சோட்டுக்காரா… உங்களவரை அசரவைக்கும் ஒரு கிப்ட் தரலாம்.

இந்த நாளை இனிய நாளாக மாற்றி சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் கணவருடன் அன்புடன் செலவிடுங்கள்.