‛கில்லி' ரீ-ரிலீஸ் : கொண்டாடி வரும் '2கே' ரசிகர்கள்
தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் 'கில்லி'.
விஜய்யின் முக்கியமான படங்களில் இன்றும் கில்லிக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப்படம் இப்போது ரீ-ரிலீஸ் முறையில் வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளில் 350 தியேட்டர்களிலும் தமிழ், கேரளா, கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது.
அன்றைய காலக்கட்டத்தில் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கில்லி திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது
ரீ-ரிலீசில் 'கில்லி' படம் சுமார் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரீ-ரிலீஸ் படங்களில் இதுவரை வெளிவந்த முந்தைய படங்களின் சாதனையையும் 'கில்லி' முறியடித்துள்ளதாம்.
படம் வெளியான பல தியேட்டர்களில் ரசிகர்கள் பாடல்களுக்கு எழுந்து நடனமாடுவது, பன்ச் வசனங்கள் வரும் போது கூடவே சேர்ந்து கத்திப் பேசுவது என தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள்.
தற்போதும் கில்லி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரும் வரவேற்பை பெறுகிறது. மேலும் கில்லி படத்தின் சேஸிங், கபடி மற்றும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
2004ல் தொடங்கிய பயணம் 2024ல் முழு வட்டம் நிறைவடைந்து, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது என இதன் வெற்றி குறித்து த்ரிஷா பதிவிட்டுள்ளார்.