ரஜினி 171 தலைப்பு கூலி - ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171வது படத்தின் தலைப்பு 'கூலி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தலைப்பு அறிவிப்பு வீடியோ நேற்று வெளியானது.
ஒரு தங்க குடோனில் சிலர் தங்கத்தையும், ஆபரணங்களையும் அடுக்கிக் கொண்டிருக்க அங்கு அதிரடியாக என்ட்ரி கொடுத்து அவர்களை அடித்துப் போட்டு அந்த தங்கக் கட்டிகள் மீது ஹாயாக படுத்துக் கொண்டு சிரிக்கிறார் ரஜினி.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம் பெற்ற 'சம்போ சிவசம்போ' பாடலில், கண்ணதாசனின் வரிகளான... “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. என்பதை நீள வசனமாக பேசி அந்த அடியாட்களைப் பந்தாடுகிறார்.
அவரது வருகையை யாரோ ஒருவர் போனில் சொல்ல, கடைசியில் அவரிடமே போனில் பேசி ரஜினி ஒரு பெரிய சிரிப்புடன் டெரர் காட்டுகிறார்.
வசனம் பேசி முடித்த பின், ரஜினி, பூர்ணிமா ஜெயராம் நடித்து வெளிவந்த 'தங்கமகன்' படத்தில் இடம் பெற்ற இளையராஜா இசையமைப்பில், வந்த ''வா வா பக்கம் வா” பாடலை பயன்படுத்தியுள்ளார் அனிருத்.
இதற்கான வீடியோவில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
80களின் பாடல் வசனம், 80களின் பாடலின் பின்னணி இசை என 'ரெட்ரோ' டைப்பில் அந்தக் கால ரஜினியைப் பார்த்த பரவசத்தை ஏற்படுத்துகிறது இந்த வீடியோ.